தேர்ந்தெடுக்கும் உரிமை
UPDATED : ஜூலை 18, 2024 | ADDED : ஜூலை 18, 2024
''உங்களுக்கு சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டு விட்டது'' என்றார் நபிகள் நாயகம். அதைக் கேட்ட சிலர், ''அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நாம் செயல்படலாமே'' எனக் கேட்டனர். ''இல்லை; யார் நன்மையான செயல்களை செய்கிறாரோ அவருக்கு சொர்க்கத்துக்கு செல்லும் பாதை காட்டப்படுகிறது. யார் கஞ்சத்தனம், தீயசெயல்களைச் செய்கிறாரோ அவருக்கு நரகத்திற்குரிய பாதை காட்டப்படுகிறது'' என்றார். நல்லதையும், கெட்டதையும் தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவரை பொறுத்தது. கெட்டதைத் தேர்ந்தெடுத்தால் இந்த உலகில் தற்காலிக சுகம் கிடைக்கலாம். ஆனால் மறுமைநாளில் நரகத்தில் வேக நேரிடும்.