உள்ளூர் செய்திகள்

அடிக்கிற கைதான் அணைக்கும்

'அவன் அடித்த அடியை கூட மறந்திடலாம். ஆனால் அவன் பேசிய பேச்சை மறக்க முடியாது' என பலர் சொல்வதை கேட்டிருப்போம். எதற்காக... இப்படி சொல்கிறார்கள் என்று என்றைக்காவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா..உடலில் படும் அடி மறைந்துவிடும். மனதில் பட்ட காயம் ஆறாது. அதிலும் நமது அன்பிற்கு உரியவர்கள் கோபமாக பேசிவிட்டால் அதிக வருத்தம் கொள்கிறோம். ஆனால் அவர் எத்தனை முறை நம்மீது அன்பை பொழிந்தார் என்று நினைத்து பார்க்கிறோமா... இல்லை. நாம் ஏதேனும் தவறு செய்துவிட்டோம். அதற்காக அவர் கடிந்து கொள்கிறார் என்று எண்ணுங்கள். அடிக்கிற கைதானே அணைக்கும். அன்பிருக்கும் இடத்தில்தான் கண்டிப்பும் இருக்கும். எனவே அன்பிற்கு உரியவர்கள் சொல்லும் வார்த்தைகளை பெரிதுபடுத்தாதீர்கள்.