உள்ளூர் செய்திகள்

மனத்தூய்மை காப்போம்

ஒருவர் தன் தேவையைக் கூறி இறைவனிடம் பிரார்த்தித்தால் கேட்டதை தந்து விடுகிறான் அல்லது இப்போது வைத்த கோரிக்கையை அவருக்காக மறுமையில் சேகரித்து வைக்கிறான். இப்படியாக, பிரார்த்தனை என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இதையே 'துஆ' என்பர்.பிரார்த்தனையின் போது, ஒழுங்குமுறைகளையும், மனத்துாய்மையையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அசுத்தமான உணர்வுகள், தவறான எண்ணங்கள் இருப்பது கூடாது. '...திண்ணமாக, அல்லாஹ் தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும், துாய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான்' என குர்ஆன் கூறுகிறது.