உள்ளூர் செய்திகள்

சுமைகளை சுகமாய் ஏற்போம்

இந்த உலகில் பிறந்த அனைவரும் உறவுகள் இன்றி வாழ முடியாது. அப்படி தனிமையில் வாழ்ந்தாலும் சந்தோஷம் என்பது இருக்காது. உறவினர் மீது குற்றம் மட்டுமே காண்பவருக்கு வேண்டியவர் என யாரும் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களை ஆதரிக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. உறவுகளுக்குள் அவ்வப்போது கருத்துவேறுபாடு வரத்தான் செய்யும். அவற்றை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். என்றைக்கோ நடந்த கசப்பான நிகழ்வுகளை மறந்துவிடுங்கள். அவர்களது பாசத்தின் மொழியை கேட்டுப்பாருங்கள். உறவினர் மகிழ்ச்சியில் தான் இறைவனின் மகிழ்ச்சி உள்ளது. உறவினரின் சுமைகளை சுகமாய் ஏற்போம். நம் சுகங்களை சமமாய் பிரித்து கொடுப்போம்.