முந்திச் செல்வோம்
UPDATED : செப் 28, 2022 | ADDED : செப் 28, 2022
மற்றவர்களின் பணிகளை பார்த்து ஒரு சிலர் பாராட்டுவர். சிலர் சம்பந்தம் இல்லாமலே வசை பாடுவர். ஏன் என யோசித்துப் பார்த்தால் அவரது நற்செய்கை, முன்னேற்றம் வசைபாடுபவருக்கு பிடிக்காது. இருந்தாலும் செய்யும் செயலில் இருந்து பின் வாங்கக்கூடாது. சாலையில் மாட்டுவண்டியும், பஸ்சும் செல்கிறது. ஒன்றுக்கொன்று முந்திச் செல்ல போட்டியிடுகிறது. பஸ்சின் வேகத்திற்கு மாட்டுவண்டியால் ஈடு கொடுக்க முடியாது. அதனால் மாட்டுவண்டிக்காரர் பஸ் டிரைவரை வசைபாடுவார். அதை உற்சாகமாக ஏற்றுக்கொண்டு பஸ்ஸை ஒட்டிச் செல்வார் டிரைவர். அதனைப்போல நம்மை வசைபாடுபவர்களின் வார்த்தைகளை உரமாக்கி பணியை செய்வோம். வாழ்வில் முந்திச்செல்வோம்.