ஒழுக்கமுடன் வாழச் செய்வோம்
UPDATED : ஆக 03, 2018 | ADDED : ஆக 03, 2018
நம் பிள்ளைகள் மட்டுமின்றி மற்றவர் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும், ஒழுக்கமுடன் வாழ வேண்டும் என்ற அக்கறை வேண்டும்.இது பற்றி நபிகள் நாயகம் சொல்வது...''சிலர் அண்டை வீட்டாரிடம் இறைநெறி பற்றிய அறிவைத் தோற்றுவிப்பதில்லை. மேலும் இறைநெறியை கற்றுத் தருவதுமில்லை. இறைநெறி குறித்து அறியாமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் உணர்த்துவதில்லை. தீயசெயல்களை விட்டுத் தடுப்பதுமில்லை.இறைவன் மீது ஆணையாக! மக்கள் தம் அண்டை வீட்டாருக்கு அவசியம் இறைநெறியை கற்றுத்தர வேண்டும். இறைநெறியின் ஆழ்ந்த கருத்துக்களை உருவாக்க வேண்டும். நல் உபதேசம் செய்ய வேண்டும். தீயவற்றிலிருந்து அவர்களைத் தடுக்க வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு நான் தண்டனை அளிப்பேன்'' என்கிறார். எனவே அண்டைவீட்டாருக்கு இறைநெறியையும், ஒழுக்க முறைகளையும் கற்றுக் கொடுப்போம்.