உள்ளூர் செய்திகள்

எளிமையான வாழ்வு

எளிமையை விரும்பி அந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்தான் நபிகள் நாயகம். ஒருமுறை உமர் என்பவர் இவரைப் பார்க்க வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவர் பார்த்த விஷயங்களை அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. வீடு சிறிய அறையுடன் கூடிய பேரீச்ச இலைகளால் வேயப்பட்ட கூரையைக் கொண்டிருந்தது. அந்த அறையில் விரிப்பாக பயன்படக்கூடிய பாயும், ஒரு தண்ணீர் பாத்திரம் மட்டுமே இருந்தது. நாயகம் கட்டிலில் கயிற்றுத் தழும்புகள் முதுகெங்கும் பதிந்திருக்கும்படி படுத்திருந்தார். இதைப் பார்த்து வருந்திய உமர், ''மற்ற நாட்டுத் தலைவர்கள் ஆடம்பரமாக இருக்கும்போது, நீங்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறீர்கள்'' எனக்கேட்டார். இதற்கு அவர், ''இறைவன் எளிமையையே விரும்புகிறான். எளிமையாக வாழ்பவர்கள் மறுமைப் பேரின்பம் பெற தகுதி பெறுகிறார்கள். நான் மறுமையில் பெருவாழ்வு பெறுவதை தாங்கள் விரும்பவில்லையா'' எனக்கேட்டார்.