நல்லா பேசுங்க.. நல்லதையே பேசுங்க...
UPDATED : அக் 29, 2021 | ADDED : அக் 29, 2021
நமக்கு நாக்கு கொடுக்கப்பட்டிருப்பது சாப்பாட்டை ருசிக்க மட்டுமல்ல. பேசுவதற்கும் தரப்பட்டுள்ளதால் கீழே உள்ளவற்றை பின்பற்றுங்கள். * நன்மை தரும் வார்த்தைகளை சிரித்த முகத்துடன் பேசுங்கள்.* பிறருடைய குறைகள் பற்றி பேசாதீர்கள்.உங்களது பேச்சுக்களை இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர் குறித்து கொள்கிறார். இறப்புக்கு பின், 'இவர் இன்ன வார்த்தையைப் பேசியதால், இவருக்கு இந்த தண்டை கிடைக்கும்' என சொல்வார். எனவே நல்லதையே பேசுங்க.