மனிதர்களில் சிறந்தவர்
UPDATED : ஏப் 19, 2022 | ADDED : ஏப் 19, 2022
இன்று பலரும் உறவினர்களை மதிப்பதே இல்லை. காரணம் கேட்டால், 'நான் கஷ்டப்படும்போது அவர்கள் என்னை திரும்பி பார்க்கவில்லை. சொத்தில் எனக்கான பங்கை தராமல் ஏமாற்றுகிறார்கள்' என பல பதில்கள் வைத்திருப்பர். இப்படி நாளுக்குநாள் உறவுகள் இடையே பிரச்னை கூடிக்கொண்டே செல்கிறது. அவர்களை புரிந்து கொள்ளாததே இதற்கு காரணம். அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் பெரிதுபடுத்தாதீர்கள். நீங்கள் தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேளுங்கள். உறவினர்களுக்கு உங்களால் முடிந்து உதவிகளை செய்யுங்கள். அப்போதுதான் அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். 'குடும்பத்தினருக்கு உதவுபவனே மனிதர்களில் சிறந்தவன். நான் எனது குடும்பத்தினருக்கு சிறந்தவனாக உள்ளேன்' என கூறுகிறார் நாயகம்.