சிந்தித்து பேசுங்கள்
UPDATED : ஆக 04, 2022 | ADDED : ஆக 04, 2022
உடலில் உள்ள ஒரு உறுப்பை வைத்து ஒருவரின் பண்பை அறிய முடியும் என்றால் அது நாக்கு தான். நாவின் வலிமையால் வாழ்ந்தோரும், வீழ்ந்தோரும் உண்டு. எனவே நாக்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. சிந்தித்து பேசினால் நன்மையே விளையும். இதுவே உடல்நலத்திற்கு நல்லது. நாக்கின் நீளம் மூன்று அங்குலம் தான். அது ஆறடி மனிதனை கொன்று விடும். விருப்பு, வெறுப்பு, கோபம், மகிழ்ச்சியிலும் கூட வார்த்தைகளை தெளிவாகவும், உறுதியாகவும் பேசுங்கள்.