உள்ளூர் செய்திகள்

தவக்குல் என்றால் என்ன?

ஒரு பொருளை அடைய ஒருவன், தன்னால் ஆன முயற்சிகளில் ஈடுபட்டும் கிடைக்கா விட்டால் இறைவனிடம், “என்னால் ஆன முயற்சிகளை எடுத்தும் பலனில்லை. அதை பெறச் செய்வது உன் பொறுப்பு'' என மனப்பூர்வமாக வழிபட வேண்டும். இவ்வாறு முழுமையாக இறைவனை சார்ந்து அவனிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதற்கு 'தவக்குல்' என்று பெயர். மனிதன் தன் பொறுப்பாளனாகவும், பாதுகாவலனாகவும் இறைவனை ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் உள்ளம் எப்போதும் திகைப்பிலும், கவலையுடனும் தான் இருக்கும். மனதை இறைவன் பக்கம் திருப்பிவிட்டால் ஒருமித்த உணர்வு கிடைக்கும்.