மனிதன் விரும்புபவை
UPDATED : செப் 16, 2022 | ADDED : செப் 16, 2022
தன்னை இழிவானவன், தவறான பழக்கம் உள்ளவன் என்று யாரும் பேசக்கூடாது என அனைவரும் விரும்புகின்றார்கள். அதற்கு அவர்களிடம் இருக்கும் தவறான குணங்களையும், இழிவான நடத்தைகளையும் விட்டு விலகியிருக்க வேண்டும். பிறர் அவர்களைப்பற்றி நல்ல வார்த்தை பேச வேண்டும் என்றால் மக்கள் புகழக்கூடிய, பாராட்டக்கூடிய பணிகளில் ஈடுபட வேண்டும் என்கிறார் நாயகம்.