உள்ளூர் செய்திகள்

இறைவன் யாரை ரசிக்கிறான்?

பலர் தாம் ஏழையாக இருக்கிறோமே என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.செல்வந்தர்களை நினைத்து பொறாமைப்படுகிறார்கள். இது தேவையற்றது. இறைவனின் முன்னிலையில் ஏழைகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.நபிகள் நாயகம், “வறுமை என்பது இறைவன் தரும் பரிசு. தன் மீது விசுவாசம் கொண்டவனுக்கு இறைவன் வறுமையையே அன்பளிப்பாக தருகிறான். வறுமை இழிவான ஒன்றல்ல. அது பெருமை தரக்கூடிய விஷயம். ஒருவனின் மறைவுக்குப் பிறகு, அவன் இறைவன் முன்னிலையில் வறுமைக் கோலத்தில் நின்றால் அதை அலங்காரமாக பார்த்து ரசிக்கிறான்,” என்கிறார்.அதேநேரம், வறுமை உங்களைத் தேடி வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. எந்த வீட்டில் குழந்தைகள் திட்டப்படுகிறார்களோ, அந்த வீட்டுக்கு வறுமை நிச்சயம் வரும். குறிப்பாக, குழந்தைகளை 'நீ செத்துப்போ' என திட்டக்கூடாது. அந்த வார்த்தை வறுமையை உண்டாக்கும்.அளவுக்கதிகமான ஆடம்பர உடைகளை அணிபவர்களிடத்திலும், பெருமைக்காக ஆடை அணிகிறவர்களுக்கும் வறுமை உண்டாகும்.உங்கள் வீட்டில் சிலந்திப் பூச்சிகள் இருந்தால் அவற்றை அகற்றுங்கள். வீட்டில் இருந்தால் அது, வாழ்க்கையில் வறுமையை இழுத்து வரும். வீட்டை சுத்தம் செய்யாமல் இருப்பது சோம்பலின் அறிகுறி. சோம்பல் உள்ளவனுக்கு வறுமை உறுதி.