உள்ளூர் செய்திகள்

அக்கம் பக்கம்

கட்சி தாவ ரெடி?'எதிர்க்கட்சிகளில் யார் யார் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பதை கண்டுபிடிப்பதற்காகவே ஒரு குழு அமைத்திருப்பர் போலிருக்கிறது...' என, பா.ஜ.,வினரை பார்த்து புலம்புகின்றனர், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியினர். இந்த மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர், குமாரி செல்ஜா. இவர், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரது அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். காங்கிரஸ் மேலிட தலைவர்களான சோனியா, பிரியங்கா ஆகியோருக்கும் நெருக்கமானவர். தற்போது, லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். ஹரியானா சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கஉள்ள நிலையில், உட்கட்சிபூசல் காரணமாக, ஓரம்கட்டப்பட்டுள்ளார் செல்ஜா. முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பூபிந்தர் சிங் ஹுடாவுக்கும், செல்ஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாக பிரசாரத்துக்கு செல்லாமல் அமைதி காத்து வந்தார், செல்ஜா. இதையறிந்த பா.ஜ., பிரமுகர்கள் சிலர், 'உங்கள் கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. எங்கள் பக்கம் வந்து விடுங்கள்; உங்களைகவுரவிக்கிறோம்...' என, துாண்டில் போடவே, இந்த விவகாரம் ஹரியானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'நான், காங்கிரசின் தீவிரமான தொண்டர். வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டேன்...' என, செல்ஜா மறுத்தாலும், 'இந்தம்மாவை நம்ப முடியாது.தேர்தல் நடப்பதற்குள் பா.ஜ.,விற்கு தாவ வாய்ப்பு உள்ளது...' என, கலக்கத்துடன் கூறி வருகின்றனர், ஹரியானா காங்., நிர்வாகிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி