உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ஒளிமயமான எதிர்காலம்!

ஒளிமயமான எதிர்காலம்!

'கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சினால் வேகமாகஇயங்கும் என்பது சரியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது...' என, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் குறித்து பேசுகின்றனர், உத்தர பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகள். ஆகாஷ் ஆனந்த், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் நெருங்கிய உறவினர். கடந்தாண்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், தன் அரசியல்வாரிசாகவும் அவரைஅறிவித்தார், மாயாவதி. ஆனால், லோக்சபாதேர்தலுக்கு சில நாட்களுக்குமுன்னதாக, 'ஆகாஷ் ஆனந்த் அரசியலில் பக்குவப்பட வேண்டும்...' என கூறி, அவரிடமிருந்து கட்சி பதவியை பறித்தார். லோக்சபா தேர்தல் முடிந்ததும், மீண்டும் ஆகாஷ் ஆனந்தை, பகுஜன் சமாஜ்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகநியமித்தார். தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் கட்சி தொண்டர்களிடையேநம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, சமீபத்தில்இட ஒதுக்கீடு தொடர்பாக பிரமாண்டபோராட்டத்தை ஆகாஷ் ஆனந்த் அறிவித்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக சிறிய போராட்டம் கூட பகுஜன் சமாஜ் சார்பில் நடத்தப்பட்டது இல்லை; இதனால், இந்த அறிவிப்பு தொண்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இவற்றை எல்லாம் பார்த்த பகுஜன் சமாஜ் கட்சியினர், 'மீண்டும் ஒரு ஒளிமயமான எதிர்காலம் தென்படுகிறது...' என, மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை