மேலும் செய்திகள்
சிங்கம் சிங்கம் தான்!
22-Feb-2025
'பொய் தகவலை தொடர்ந்து பரப்பி, அரசியலில் இருந்தே என்னை அடியோடு ஒழித்துக் கட்ட நினைக்கின்றனர்...' என, எரிச்சலுடன் கூறுகிறார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபகாலமாக நிதிஷ் குமாரின் உடல்நிலை குறித்து பீஹாரில் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.'நிதிஷ் குமார், வயது மூப்பு காரணமாக அவதிப்படுகிறார்; என்ன செய்கிறோம் என தெரியாமல், திடீரென அதிகாரிகளின் கால்களில் விழுகிறார்...' என, செய்திகள் வெளியாகி வருகின்றன. எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.'நிதிஷ் குமார் முழு உடல் தகுதியுடன் இல்லை. ஆனால், என் தந்தையும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், 76 வயதிலும் உடல் தகுதியுடன் இருக்கிறார்...' என, தேஜஸ்வி கூறி வருகிறார். இதனால் கடுப்பான நிதிஷ் குமார், 'எனக்கு 73 வயதாகிறது. என்னை விட வயதானவர்கள் இது போன்ற உயர் பதவிகளில் இதற்கு முன் இருந்தது இல்லையா?'சக்கர நாற்காலியில் இருந்தபடியும், நடக்கவே முடியாத நிலையிலும் பலர், முதல்வர், பிரதமர், கவர்னர் உள்ளிட்ட பதவிகளை வகித்தது இல்லையா? அரசியல் ரீதியாக என்னை வீழ்த்த முடியாத கோழைகள், இது போன்ற பொய் தகவலை திட்டமிட்டு பரப்புகின்றனர்...' என, கடுப்புடன் கூறுகிறார்.
22-Feb-2025