உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / உபகாரமில்லை; உபத்திரவம்!

உபகாரமில்லை; உபத்திரவம்!

'ஏற்கனவே ஹிந்துக்களின் ஓட்டுகளை வாங்குவது குதிரைக் கொம்பாக இருக்கிறது; இதில், இந்த பிரச்னை வேறா...' என புலம்புகிறார், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ்.உ.பி.,யில் கடைசியாகநடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். எப்படியாவது மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என பெரும் முயற்சி செய்தும், அகிலேஷ் யாதவுக்கு அது, கைகூடாமல் போய் விட்டது. உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்டியது, மஹா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்தியது என, ஹிந்துக்களின் அபிமானத்தை பெற்றுள்ளது, பா.ஜ., கட்சி. இந்த இரும்பு திரையை உடைத்து, ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவது என்பது, அகிலேஷ் யாதவுக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான், மஹாராஷ்டிராவில் உள்ள சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி, முகலாய மன்னர் அவுரங்கசீப்பை பாராட்டி பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. 'அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்தியவரை பாராட்டி பேசுவதா...' என, ஹிந்துக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அகிலேஷ் யாதவோ, 'ஆட்சியை பிடிப்பதற்கு எங்கள் கட்சியினர் உபகாரம் செய்வது போல் தெரியவில்லை; உபத்திரவம் தான் செய்கின்றனர்...' என, புலம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி