உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / மொட்டை தலைக்கு முடிச்சு!

மொட்டை தலைக்கு முடிச்சு!

'அரசியலுக்கு வந்தால், தனிப்பட்ட சந்தோஷங்களை எல்லாம் தியாகம் செய்ய வேண்டுமா...?' என, ஆவேசமாக பேசுகின்றனர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் ஆதரவாளர்கள். ஒவ்வொரு புத்தாண்டுஅன்றும், வெளிநாட்டுக்கு செல்வதை ராகுல் வழக்கமாக வைத்துள்ளார்;அங்கு நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரும்புவார். அதேபோல், இந்தாண்டும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக அவர், தென் கிழக்கு ஆசிய நாடான வியட்னாம்சென்றுள்ளார்; வெளிப்படையாக தெரிவிக்காமல், இந்த பயணத்தை ரகசியமாக வைத்திருந்தார். பா.ஜ.,வினர் இந்த விவகாரத்தை மோப்பம் பிடித்து விட்டனர்.'காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள்பிரதமருமான மன்மோகன் சிங் காலமாகி ஒருவாரம் கூட முடியவில்லை. நாடு முழுதும் அரசுசார்பில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.'ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த ராகுல், புத்தாண்டு கொண்டாடுவதற்காக வெளிநாட்டுக்கு பறந்து விட்டார். இதுதான், மன்மோகன் சிங் மீது, ராகுல் வைத்திருக்கும் மரியாதையா...' என, பா.ஜ., தலைவர்கள் ஆவேசமாக அறிக்கை விட்டனர். இந்த விவகாரம், ராகுல் விசுவாசிகளுக்குஎரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. 'காங்கிரஸ் கட்சி சார்பில் மன்மோகன் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 'ராகுலின் பயணம், அவரது தனிப்பட்ட விஷயம்.பா.ஜ.,வினர் இதை புரிந்து கொள்ளாமல், மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகின்றனர்...' என கொந்தளிக்கின்றனர்,ராகுலின் ஆதரவாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !