மேலும் செய்திகள்
பொன்முடிக்கு மீண்டும் தி.மு.க.,வில் பதவி?
09-Jun-2025
இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலீஸ் அதிகாரி!
26-Jun-2025
'பதவிக்கு புதியவராக இருந்தாலும், விபரமானவராகத் தான் இருக்கிறார்...' என, டில்லி முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ரேகா குப்தா பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்று ஐந்து மாதங்களாகின்றன. 'நிர்வாகத்தில் அனுபவம் இல்லாதவரை வைத்து எப்படி சமாளிக்க போகின்றனர் என தெரியவில்லை. நாட்டின் தலைநகரான டில்லிக்கு, அனுபவம் வாய்ந்த ஒருவரை முதல்வராக்கியிருக்க வேண்டாமா...' என, துவக்கத்தில் பேச்சு எழுந்தது.ஆனால் ரேகா குப்தா, இந்த பிரச்னையை சாமர்த்தியமாக சமாளித்து விட்டார். ஆயினும், 'விளம்பர விரும்பி' என, இவர் மீது தற்போது முத்திரை குத்தப்பட்டு வருகிறது. 'பத்திரிகைகளில் தினமும் தன் புகைப்படங்கள் வர வேண்டும் என விரும்புகிறார்...' என்று, எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, 'உங்கள் தலைமையிலான அரசு...' என கூறி, சில நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து சுதாரித்த ரேகா குப்தா, 'தயவு செய்து, என் தலைமையிலான அரசு என்று கூறாதீர்கள். பா.ஜ., தலைமையிலான அரசு என்று கூறுங்கள். எனக்கு பிரச்னையை ஏற்படுத்தி விடாதீர்கள்...' என, கோரிக்கை வைத்தார்.இதை கேட்ட பத்திரிகையாளர்கள், 'ரேகா குப்தா உஷாராகத் தான் இருக்கிறார். பிழைக்க தெரிந்த அரசியல்வாதி தான்...' என, தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
09-Jun-2025
26-Jun-2025