உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ‘அறிகுறியே தெரியலையே!’

‘அறிகுறியே தெரியலையே!’

‘தொடர் தோல்விகளால் துவண்டு போய் கிடக்கிறார்...’ என, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பற்றி கவலையுடன் பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள். மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங் கிரஸ் படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து, 15 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்த மம்தாவுக்கு, இந்த தோல்வி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அவரது கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அடுத்தடுத்து விழுந்த அடியால் கலக்கத்தில் இருந்த மம்தா, சமீபத்தில் நடந்த நந்திகிராம், ரெஜி நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என, பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால், இரண்டு தொகுதிகளிலுமே பா.ஜ., தான் வெற்றி பெற்றது. அதிலும், ரெஜி நகர் தொகுதியில், மம்தாவின் வேட்பாளருக்கு டிபாசிட் கூட கிடைக்கவில்லை. அவர், வெறும் 3,847 ஓட்டுகள் மட்டுமே வாங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத மம்தா, ‘கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, வெற்றிக்கான அறிகுறியே தென்படவில்லையே...’ என, கவலையில் ஆழ்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lakshminarasimhan
அக் 12, 2026 08:03

என் கருத்த காணோம் என்று தேடுவது கிணற்றை காணோம் கிணற்றை காணோம் என்கிற வடிவேலு ஜோக் தான் ஞாபகம் வருது


Lakshminarasimhan
அக் 12, 2026 08:00

இந்த பிம்பத்தை மம்தாவுக்கு எதிராக கட்டமைத்ததே இந்த மத்திய ஆளும் பா ஜ க தானே அப்புறம் எப்படி மம்தா வெற்றிபெறுவார்


சமீபத்திய செய்தி