மேலும் செய்திகள்
அறநிலைய அதிகாரிக்கு குடைச்சல் தரும் அறங்காவலர்!
25-May-2025
'காக்கா பிடித்து காலத்தை ஓட்டும் அதிகாரிகளின் தொல்லை, இனி முடிவுக்கு வந்து விடும்...' என, நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர், தெலுங்கானா மாநில மக்கள்.இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ரேவந்த் ரெட்டிக்கு, 55 வயது தான் ஆகிறது. தெலுங்கானாவில் முக்கிய பதவிகளை வகிக்கும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், முதல்வரை விட மிகவும் மூத்தவர்கள்; அனுபவம் வாய்ந்தவர்கள். இவர்களில் சிலர், முதல்வர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை, 'காக்கா' பிடித்து, அவர்களை கைக்குள் போட்டு காரியம் சாதித்து வந்தனர். இது போன்ற அதிகாரிகள், தங்கள் வேலையையும் முறையாக செய்வது இல்லை. பொது நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்றால், வயதில் இளையவர் என்று கூட பாராமல், அவரது காலில் விழுந்து எழுந்து, ஆசீர்வாதம் வாங்குவதை இந்த அதிகாரிகள் வழக்கமாக வைத்திருந்தனர்.இந்த விவகாரம், உண்மையாக உழைக்கும் அதிகாரிகளிடமும், மக்களிடமும் முகச் சுளிப்பை ஏற்படுத்தியது; எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.இதையடுத்து, 'இனி மேல் பொது நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் எவரும் என் காலில் விழக் கூடாது...' என, அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார், ரேவந்த் ரெட்டி. இதனால் நிம்மதி அடைந்துள்ள தெலுங்கானா மக்கள், 'காலில் விழுவதற்கு தடை விதித்தால் மட்டும் போதாது; வேலை பார்க்காமல் காலத்தை ஓட்டும் அதிகாரிகளை சஸ்பெண்டும் செய்ய வேண்டும்...' என்கின்றனர்.
25-May-2025