உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / கொம்பு சீவும் மேலிடம்?

கொம்பு சீவும் மேலிடம்?

'ஏற்கனவே இருவருக்கும் ஆகாது; இதில், இந்த பிரச்னை வேறா...' என, உத்தர பிரதேச மாநில, பா.ஜ.,வில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யாவுக்கும் இடையிலான மோதல் குறித்து கவலைப்படுகின்றனர், அந்த கட்சியின் தொண்டர்கள். உ.பி.,யில், 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, பா.ஜ., மாநில தலைவராக இருந்தவர் தான், கேசவ் பிரசாத் மவுர்யா. அவருக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும் என, பேசப்பட்டது.ஆனால், யோகி ஆதித்யநாத் முதல்வராக்கப்பட்டார்; மவுர்யாவுக்கு துணை முதல்வர் பதவி மட்டுமே கிடைத்தது. அப்போதே யோகிக்கும், மவுர்யாவுக்கும் பனிப் போர் துவங்கி விட்டது.அதன்பின், 2022 சட்டசபை தேர்தலிலும், பா.ஜ., வெற்றி பெற்று, ஆதித்யநாத் முதல்வரானார். மவுர்யா தேர்தலில் தோல்வி அடைந்தார். 'யோகியின் உள்ளடி வேலை தான் தோல்விக்கு காரணம்...' என, மவுர்யா ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர். ஆயினும், அவரை எம்.எல்.சி.,யாக்கி, மீண்டும் துணை முதல்வர் பதவியை மேலிடம் வழங்கியது.கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், உ.பி.,யில் பா.ஜ., 29 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. 'முதல்வரை, கட்சி தொண்டர்கள் எளிதில் அணுக முடியவில்லை. கட்சியை விட உயர்ந்தவர் யாரும் இல்லை...' என, வெளிப்படையாகவே யோகியை விமர்சித்தார் மவுர்யா. இந்நிலையில், உ.பி., மாநில பா.ஜ., தலைவராக மீண்டும் மவுர்யாவை, கட்சி மேலிடம் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யோகி ஆதரவாளர்களோ, 'மேலிட தலைவர்களே, மவுர்யாவுக்கு கொம்பு சீவி விடுகின்றனர் போல் தெரிகிறது...' என, புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை