மேலும் செய்திகள்
72 தொகுதிகள் வேண்டும்: காங்கிரசில் திடீர் குரல்
26-Apr-2025
'செய்வது ஒன்று; சொல்வது ஒன்று...' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பற்றி பொருமுகின்றனர், கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள். காங்கிரஸ் கட்சிக்குள் ராகுலின் செல்வாக்கு வளரத் துவங்கியதும், தன் தாய் சோனியா காலத்து விசுவாசிகளை ஓரம்கட்டத் துவங்கினார்; தனக்கென ஒரு ஆதரவுக் கூட்டத்தையும் உருவாக்கினார். இந்த கூட்டத்தை, 'ஜால்ரா கூட்டம்' என, மூத்த தலைவர்கள் விமர்சித்தனர். தற்போது காங்., தலைவர் பதவியில் ராகுல் இல்லாவிட்டாலும், கட்சிக்குள் அவர் வைத்தது தான் சட்டம்.சமீபத்தில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் பங்கேற்றார். அப்போது அவர், 'கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய அவசியம் வந்து விட்டது. மாவட்ட தலைவர்களாக இளைஞர்களை அதிகம் நியமியுங்கள்.'அதே நேரத்தில், அவர்கள் நமக்கு விசுவாசமாகவும் இருக்க வேண்டும். எனவே, 2017க்குப் பின் கட்சிக்கு வந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பை கொடுக்க வேண்டாம்...' என்றார். இதைக் கேட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், 'தெலுங்கானா முதல்வராக உள்ள ரேவந்த் ரெட்டி, கட்சியில் சேர்ந்து சில ஆண்டுகள்தானே ஆகிறது; அவருக்கு எப்படி முதல்வர் பதவி கொடுத்தீர்கள். அவருக்கு இந்த விதி பொருந்தாதா...' எனக் கொந்தளிக்கின்றனர்.
26-Apr-2025