வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தலைவர் ஆகும் தகுதி அகிலேஷுக்கு வந்து விட்டது , இனி காங்கிரசின் தலைவராகவும் ஆசை படலாம் , அனால் இவனும் ஒரு குடும்ப அரசியல்வாதி அல்லவா
மேலும் செய்திகள்
ஆட்சியை பிடிக்க முடியுமா?
10-Oct-2024
'ஒரே ஒரு தேர்தலில், அதிலும் முழுமையாகக் கூட வெற்றி பெறவில்லை; அதற்கு இவ்வளவு ஆட்டமா...' என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்.இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன் நடந்த லோக்சபா தேர்தலில்,சமாஜ்வாதி, காங்., அடங்கிய, 'இண்டியா' கூட்டணி, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.அதாவது, மொத்தமுள்ள80 தொகுதிகளில், சமாஜ்வாதி, 37, பா.ஜ., 33 தொகுதிகளில் வெற்றி பெற்றன. வெற்றி வித்தியாசம் பெரிய அளவில் இல்லை என்றாலும், ஆட்சியை பிடித்துவிட்டது போன்ற மனநிலையில் உள்ளார், அகிலேஷ். உ.பி.,யில் ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்குஅடுத்த மாதம் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில், கூட்டணியில் உள்ள காங்கிரசை கலந்து ஆலோசிக்காமலே, ஆறு தொகுதிகளுக்குவேட்பாளர்களை அறிவித்து விட்டார், அகிலேஷ்.மேலும், 'ஒன்பது தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி வேட்பாளர்கள், எங்களின் சைக்கிள்சின்னத்திலேயே போட்டியிடுவர்' என்றும் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.இது, காங்கிரஸ் தலைவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டது. 'நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை. பா.ஜ., வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக, சமாஜ்வாதி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், அகிலேஷின் அகம்பாவத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம்' என, ஆவேசப்படுகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.
தலைவர் ஆகும் தகுதி அகிலேஷுக்கு வந்து விட்டது , இனி காங்கிரசின் தலைவராகவும் ஆசை படலாம் , அனால் இவனும் ஒரு குடும்ப அரசியல்வாதி அல்லவா
10-Oct-2024