மேலும் செய்திகள்
' டெண்டருக்கு ' விண்ணப்பித்ததுமே கமிஷன் பேரம்!
21-Apr-2025
'பரவாயில்லையே... பதவிக்கு புதியவராக இருந்தாலும், எதிர்க்கட்சியினரை எப்படி சமாளிப்பது என்ற வித்தையை விரைவிலேயே தெரிந்து கொண்டு விட்டார்...' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மோகன் யாதவை பாராட்டுகின்றனர், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள்.ம.பி.,யில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஏற்கனவே முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்கும் என, அனைவரும் நினைத்தனர். ஆனால், புதுமுகமான மோகன் யாதவை முதல்வராக்கியது, பா.ஜ., மேலிடம். 'நிர்வாக அனுபவம் இல்லாத ஒருவரை முதல்வராக்கியுள்ளனர்...' என, எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, பா.ஜ.,வுக்குள்ளும் முணுமுணுப்பு எழுந்தது. இந்நிலையில் தான், சமீபத்தில் ம.பி.,யில் ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கு, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, போலீசார், 'சல்யூட்' அடிக்கும் நடைமுறை இருந்தது. இதை பிரச்னையாக்கி, அரசியல் ஆதாயம் தேட, காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டனர். இதையறிந்த மோகன் யாதவ், அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை உடனடியாக கூட்டி, 'சல்யூட்' நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்தார்.இதை கேள்விப்பட்ட ம.பி., மக்கள், 'மோகன் யாதவ் தேர்ந்த அரசியல்வாதியாகி விட்டார். இனி அவரை புதுமுகம் என, யாரும் விமர்சிக்க முடியாது...' என்கின்றனர்.
21-Apr-2025