மேலும் செய்திகள்
மஹாராஷ்டிராவின் புதிய முதல்வர். 5ல் பதவி ஏற்பு
01-Dec-2024
'பறிபோன சுதந்திரம் மீண்டும் கிடைத்திருக்கிறது...' என்கின்றனர், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை மலபார் ஹில்ஸ் பகுதி மக்கள்.மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேயால் முதல்வர் பதவியை தக்க வைக்க முடியவில்லை.பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி தான் கிடைத்தது. மஹாராஷ்டிர முதல்வருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லம், மும்பையின் மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ளது; இது, பெரும் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி.ஏக்நாத் ஷிண்டே முதல்வரான பின், இந்த பகுதி பரபரப்பாகி விட்டது. 'வீட்டிற்கு, யார் வேண்டுமானாலும் வந்து குறைகளை தெரிவிக்கலாம்...' என, ஷிண்டே அறிவித்திருந்தார்.இவ்வாறு வருவோருக்கு சுடச்சுட டீ வழங்கப்படும். இதை சாப்பிட்டு விட்டு, காலி கப்களை துாக்கி வீசி விடுவர். வாழ்த்து கோஷம், போஸ்டர் என அந்த பகுதியே மாநாட்டு திடல் போல் இருந்தது.'ஷிண்டேவுக்கு முன் முதல்வராக இருந்தவர்கள் அமைதியாக குடியிருந்தனர். இவர் மட்டும் தான் இப்படி செய்கிறார்...' என, அந்த பகுதி மக்கள் புலம்பி வந்தனர். இப்போது, தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகி விட்டதால், 'இனி நிம்மதியாக இருக்கலாம்...' என, மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர், மலபார் ஹில்ஸ் பகுதி செல்வந்தர்கள்.
01-Dec-2024