மனைவிக்கு தான் மரியாதை!
'இது என்ன வம்பாக இருக்கிறது...' என, கவலைப்படுகிறார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன். எதிர்க்கட்சி கூட்டணிஆட்சி நடக்கும், விரல் விட்டு எண்ணக் கூடிய மாநிலங்களில், ஜார்க்கண்டும் ஒன்று. இங்கு சமீபத்தில் நடந்து முடிந்தசட்டசபை தேர்தலில், ஆளும் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுஆட்சியை தக்க வைத்தது.பெரும்பாலான கருத்து கணிப்புகள், 'பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்கும்' என கூறிய நிலையில், திடீர் திருப்பமாக ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த வெற்றிக்கு,தன்னைத் தான் பிரதான காரணமாக அனைவரும் கூறுவர் என நினைத்த ஹேமந்த் சோரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரதுமனைவி கல்பனாவை தான், அரசியல் பார்வையாளர்கள்,பத்திரிகையாளர்கள் பாராட்டி தள்ளுகின்றனர்.'ஜார்க்கண்ட் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, பழங்குடியின மக்களுக்கு எளிதாக புரியும் வகையில்,அரசின் திட்டங்களை எடுத்துக் கூறினார், கல்பனா. இதனால் தான், அவரது பிரசாரத்துக்கு மக்களிடையேபெரும் வரவேற்பு கிடைத்தது.'கல்பனா இல்லையென்றால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவால் வெற்றியை நினைத்துக் கூட பார்த்திருக்கமுடியாது...' என, அனைவரும் ஒரே குரலில் கூறி வருகின்றனர்.ஹேமந்த் சோரனோ, 'பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றது நான்; இதனால்ஏற்பட்ட அனுதாப அலையில் தான், மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டனர். ஆனால், எல்லாரும் கல்பனாவை பாராட்டுகின்றனரே... இதெல்லாம் ஓவராக இல்லையா...' என, புலம்புகிறார்.