மேலும் செய்திகள்
காங்., தமிழக தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்
28-Jun-2026
'ஆளுங்கட்சியாக இல்லாத போதே இவ்வளவு கோஷ்டி பூசலா; உருப்பட்ட மாதிரி தான்...' என புலம்புகின்றனர், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியினர். ம.பி.,யில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஆறு ஆண்டுகளாகவே காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. அடுத்த சட்டசபை தேர்தல், 2028ல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்கு, காங்கிரஸ் மேலிடம் சார்பில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய பிரதேச மாநில காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவரான ஜித்து பட்வாரி மற்றும் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான திக்விஜய் சிங் இடையே கடும் மோதல்கள் நடக்கின்றன. பா.ஜ., அரசின் திட்டங்களை எதிர்த்து, ஜித்து பட்வாரி போராட்டம் நடத்தினால், அதில் பங்கேற்காத திக்விஜய் சிங், தன் ஆதரவாளர்களுடன் தனியாக போராட்டங்களை நடத்துகிறார். 'திக்விஜய் சிங்கிற்கு, 79 வயதாகிறது. தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்குள், தன் மகன் ஜெய்வர்த்தனை எப்படியாவது, காங்கிரசில் முக்கிய பதவியில் அமர்த்தி விட வேண்டும் என்பதே, அவரது லட்சியமாக உள்ளது. 'இதற்கு ஜித்து பட்வாரி இடையூறாக இருப்பார் என்பதற்காகவே, அவருடன் மோதல் போக்கை திக்விஜய் சிங் கடைப்பிடிக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் காணாமல் போய் விடும்...' என்கின்றனர், அந்த கட்சியின் விசுவாசிகள்.
28-Jun-2026