உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / இது எந்த ஊர் நியாயம்?

இது எந்த ஊர் நியாயம்?

'அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத் தானே செய்கிறது...' என, கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகனும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பரத் பொம்மை பற்றி, இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2023ல் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், ஷிகாவி தொகுதியில் பசவராஜ் பொம்மை, பா.ஜ., சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததால், பசவராஜ் பொம்மையால் மீண்டும் முதல்வராக முடியவில்லை. இதைஅடுத்து, கடந்தலோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யானார். இதனால், ஷிகாவி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். நவ., 13ல் இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு, பசவராஜ் பொம்மைக்குஓரளவு செல்வாக்கு உள்ளதால், அவரது மகன் பரத் பொம்மையை வேட்பாளராக நிறுத்தியுள்ளது, பா.ஜ., மேலிடம். இதை, காங்., கடுமையாக விமர்சிக்கிறது. 'காங்கிரசில் வாரிசு அரசியல் இருப்பதாக பா.ஜ., தலைவர்கள் நாடு முழுதும் பிரசாரம் செய்கின்றனர்.ஆனால், ஷிகாவி தொகுதியில் போட்டியிடபசவராஜ் பொம்மை மகனுக்கு சீட் கொடுத்தது ஏன்?' என, கேள்வி எழுப்புகின்றனர். பரத் பொம்மையோ, 'டாக்டர் மகன் டாக்டராகலாம்.இன்ஜினியர் மகன் இன்ஜினியராகலாம். அரசியல்வாதி மகன் மட்டும் அரசியலுக்கு வரக்கூடாதா; இது எந்த ஊர் நியாயம்...' என, கொதிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ