உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  எதற்காக பென்சில்?

 எதற்காக பென்சில்?

'இவரைப் போன்ற வித்தியாசமான குணம் உடைய அரசியல்வாதிகள் இன்னும் இருக்கத் தான் செய்கின்றனர்...' என, கேரள மாநில பா.ஜ., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அந்த மாநில மக்கள். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜீவ் சந்திர சேகருக்கு சொந்த மாநிலம் கேரளா என்றாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம், குஜராத்தில் தான். இதனால், மலையாளத்தில் சரளமாக பேசுவதற்கு கொஞ்சம் தடுமாறுவார். வெற்றிகரமான தொழில் அதிபராக வலம் வந்த சந்திரசேகரை, அரசியலுக்கு அழைத்து வந்தார், பிரதமர் மோடி. ராஜீவ் சந்திரசேகர், கடந்த ஓராண்டாக கேரள மாநில பா.ஜ., தலைவராக உள்ளார். இவர் எப்போதும், தன் சட்டை பாக்கெட்டில், ஒரு பென்சில் வைத்திருப்பார். சமீபத்தில், இவரி ட ம் ஒரு பத்திரிகையாளர், 'உங்கள் பாக்கெட்டில் பென்சில் வைத்துள்ளீர்களே... என்ன காரணம்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'பெரிய காரணம் எதுவும் இல்லை. பேனா வைத்திருந்தால், யாராவது இரவல் கேட்பர். திரும்ப தர மாட்டார்கள்; கேட்கவும் முடியாது. பென்சில் வைத்திருந்தால் இரவல் கேட்க மாட்டார்கள். இதற்காக என்னை கஞ்சன், கருமி என்று அழைத்தால் கூட பரவாயில்லை...' என, சிரித்தபடியே பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை