உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

ஒரு நபருக்கு 28 கிலோ பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் ஏற்படும் பாதிப்பு தெரிந்தும் உலகளவில்அதன் பயன்பாடு அதிகரிக்கதான் செய்கிறது. 2024ல் 22 கோடி டன் பிளாஸ்டிக் குப்பை வெளியிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 20 ஆயிரம் ஈபிள் டவர்களுக்கு சமம். இதில் 7 கோடி டன் பிளாஸ்டிக் குப்பை நிலப்பகுதிகளில் சேர்கிறது. மேலும் 2024ல் உலகிலுள்ள ஒவ்வொருவரும் சராசரியாக 28 கிலோ அளவிலான பிளாஸ்டிக் குப்பை வெளியிடுவர் என ஆய்வு எச்சரித்துள்ளது. வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்திலும் பிளாஸ்டிக் பயன்பாடு பெருகி வருகிறது. தகவல் சுரங்கம்

மின்னணு ஓட்டுப்பதிவு வரலாறு

இந்தியாவில் தேர்தலில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து ஓட்டளிக்கலாம். இது 1989ல் நடைமுறைக்கு வந்தது. அதற்குமுன் இது 21 என இருந்தது. அதே போல லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கிறோம். இது முதன்முறையாக 1982ல் கேரளாவில் பரவூர் தொகுதி இடைத்தேர்தலில் சில ஓட்டுப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்டது. பின் சில மாநில சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. 2004 லோக்சபா தேர்தலில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை