அறிவியல் ஆயிரம்
வெப்பநிலையில் 'ஹாட்ரிக்'இந்தியாவில் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பிப்ரவரியில் இதுவரை இல்லாத அளவில் வெப்பநிலை பதிவாகியது. டில்லியில் பிப்., மாத வெப்பநிலையில் 74 ஆண்டுகளில் இல்லாத அளவில் 2025 பிப்., உள்ளது. அதே போல உலகளவில் 2023, 2024ம் ஆண்டை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 2025ம் வெப்பமான ஆண்டாக அமையும் என உலக வானில மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து வருவதே வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.