உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

பனிக்கட்டிக்கு நிறம் எப்படிதண்ணீருக்கு நிறம் இல்லை. ஆனால் தண்ணீர் உறைந்து உருவாகும் பனிக்கட்டி வெள்ளையாக இருக்கிறது. ஏராளமான பனிப் படிகங்களின் (ஐஸ் கிரிஸ்டல்) இணைப்பே பனிக்கட்டி. இதன் இடையே உள்ள நுண்ணிய குமிழ்களின் இடைவெளியில் காற்று நிரம்பியிருக்கும். இந்தப் படிகக் குவியல் மீது ஒளிக் கதிர்கள் விழும்போது, அவை வளைந்து போவதுடன் எதிரொளிக்கவும் செய்கின்றன. எல்லாப் படிகங்களும் ஒளிக்கதிர்களை ஒரே திசையில் இல்லாமல் பல்வேறு திசைகளில் எதிரொளிக்கின்றன. சிதறிய இந்த ஒளி பனிக்கட்டியை வெள்ளை நிறமாகத் தோன்றச் செய்கிறது.

தகவல் சுரங்கம்

குழந்தைகள் பாதுகாப்பு

அப்பாவி குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஜூன் 4ல் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது துவக்கத்தில் 1982 லெபனான் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது கவனம் செலுத்தியது. பின் ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறையால் உடல், மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கடைபிடிக்கப்படுகிறது. இத்தகைய மோசமான பாதிப்புகளை உலகில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது இத்தினத்தின் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை