| ADDED : ஜூன் 10, 2024 08:51 PM
டைனமோ வரலாறு பிரிட்டனின் மைக்கல் பாரடே. 1831ல் டைனமோவை கண்டுபிடிக்க காரணமாக இருந்தவர். பின் இவரது கொள்கைகளை அடிப்படையாக வைத்து பிரான்சின் ஹிப்போலைட் பிக்ஸி, 1832ல் முதல் டைனமோவை வடிவமைத்தார். இயந்திர ஆற்றலின் மூலமாக நேரடியாக மின் ஆற்றலை உருவாக்கும் கருவி டைனமோ. இது சைக்கிள் சக்கரத்துடன் சேர்ந்து சுழலும் வகையில் பொருத்தப்பட்டு இருக்கும். அந்த உராய்வினால் உருவாகும் இயந்திர ஆற்றல், மின்னாற்றலாக மாறி, விளக்கின் மின் இழையை அடையும். அது மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றி விளக்கை எரியச் செய்யும்.தகவல் சுரங்கம்
சிறிய மாநிலங்கள்இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் பரப்பளவு அடிப்படையில் சிறியது கோவா. பரப்பளவு 3702 சதுர கி.மீ., மக்கள் தொகை அடிப்படையில் சிறியது - ஹிமாச்சல பிரதேசம். 2011 சென்சஸ் படி இதன் மக்கள்தொகை 6.10 லட்சம். மக்கள் அடர்த்தி குறைந்தது - அருணாச்சல பிரதேசம். இங்கு 1 சதுர கி.மீ., பரப்பளவில் 17 பேர் வாழ்கின்றனர். கல்வியறிவு குறைவு-பீஹார். சதவீதம் 61.80%. ஆண் - பெண் பாலின விகிதம் குறைவு- ஹரியானா. 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் உள்ளனர். பரப்பளவில் சிறிய யூனியன் பிரதேசம் லட்சத்தீவு (32 சதுர கி.மீ.)