| ADDED : ஜூலை 22, 2024 07:40 PM
சனி கோளில் கடல்சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒன்று சனி. இதற்கு 146 துணைக்கோள்கள் (நிலவு) உள்ளன. அதிக நிலவு இருப்பது சனியில் தான். இரண்டாவதாக வியாழன் கோளில் 95 நிலவுகள் உள்ளன. இந்நிலையில் சனி கோளின் நிலவுகளில் ஒன்றான டைட்டனில் கடல், ஏரி, ஆறுகள் உள்ளன என அமெரிக்காவின் கார்னெல் பல்கலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் உள்ளதை போல இல்லாமல் டைட்டன் நிலவில் உள்ள கடல், ஏரி நீர் மீத்தேன், ஈத்தேன் வாயுக்கள் அடங்கிய திரவ வடிவில் மைனஸ் 179 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது.தகவல் சுரங்கம்
பெரிய கடல் பறவைகடல் பறவைகளில் பெரியது 'அல்ப்ட்ராஸ்'. இவை வட பசிபிக், தெற்குமுனை கடல் பகுதிகளில் காணப் படுகின்றன. வெள்ளை நிற கழுத்தும், பெரிய அலகும் கொண்டவை. இறக்கை நீளம் 8.2 - 11.5 அடி. இது 2 ஆண்டுக்கு ஒருமுறை முட்டையிட்டு 70 நாள் அடைகாக்கும். அதிக நாட்கள் அடைகாக்கும் பறவைகளில் இதுவும் ஒன்று. இவை வானில் நீண்ட நேரம், இறக்கையை அடிக்காமலே மிதக்கும். இதில் 22 வகைகள் உள்ளன. மீன், கிரில் உள்ளிட்டவற்றை உணவாக்குகிறது. இது மணிக்கு 45 கி.மீ., வேகத்தில் பறக்கும். தொடர்ந்து 80 ஆயிரம் கி.மீ., துாரம் பறக்கும்.