அறிவியல் ஆயிரம்
நீரிழிவை கண்டறிய கருவி
'டைப் - 2' நீரிழிவு பாதிப்பை முன்கூட்டியே அறியும் தொழில்நுட்ப கருவியை இந்திய அமெரிக்கர் மனோஜ் சவுத்ரி, நிஹாரிகாரெட்டி ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் 'டீப்'. உடலில் அணியும் வகையிலான சென்சார் கருவியான இது அலைபேசி செயலியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது உடலில் குளுக்கோஸ் அளவு, லிப்பிட் புரொபைல்ஸ், மரபணு முன்கணிப்பு உள்ளிட்டவற்றை கண்காணித்து தகவல் அனுப்பும். இது 'டைப் - 2' நீரிழிவு பாதிப்புக்கு வாய்ப்புள்ளதா என்பதை 10 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து விடும்.