அறிவியல் ஆயிரம்
புயல் இல்லாத பகுதிஉலகில் புயல், சூறாவளியே ஏற்படாத பகுதி ஒன்று உள்ளது. அதன் பெயர் பூமத்திய ரேகை. இது நிலநடுக்கோடு எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒரு கற்பனை கோடு. இதற்கு வடக்கே வட அரைக்கோளம், தெற்கே தென் அரைக்கோளம் எனப்படுகிறது. மற்ற பகுதிகளை விட, இங்கு 'கொரியாலிஸ் விசை' (புவி சுழற்சியால் காற்று தன் பாதையில் இருந்து விலகி வீசுவது) காரணமாக புயல், சூறாவளி உருவாகாது. நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து 5 டிகிரி வடக்கு - 5 டிகிரி தெற்கு அட்சங்களில் இருந்தே (சுமார் 500 கி.மீ., வடக்கு, 500 கி.மீ., தெற்கு) புயல் உருவாகும்.