உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

உடற்பயிற்சிக்கு பின் என்ன...

நீண்டகால ஆயுள், ஆரோக்கியமான உடல்நலனுக்கு உடற்பயிற்சி அவசியம். ஆனால் உடற்பயிற்சிக்கு பின் குளிப்பதை தவிர்த்து வந்தால், தோல் பிரச்னைகள் உருவாகும் என தோல் டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். வியர்வை மணமற்றது. ஆனால் தோலில் தங்கும்போது அது பாக்டீரியாவுக்கு உணவாகி நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே தீவிர உடற்பயிற்சி செய்த 30 நிமிடத்துக்குள் குளிப்பதால் உடற்பயிற்சியால் வெளியேறிய வியர்வை, அழுக்கு, எண்ணெய் உள்ளிட்டவை சரும துளைகளை அடைத்து தோல் வியாதிகள், தோல் எரிச்சல் ஏற்படுத்துவதை தடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !