உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

எரிமலை வயதை அறிவது எப்படி

எரிமலையின் வயதை அதன் 'லாவாவை' வைத்து விஞ்ஞானிகள் கண்டறிகின்றனர். பூமிக்கு அடியில் இருக்கும் லாவா வெளியே வந்தபின் அதன் மீது காஸ்மிக் கதிர்கள் படும். அப்போது 'ஹீலியம் 3' போன்ற வினோத ஐசோடோப்புகள் உருவாகும். ஒரு குறிப்பிட்ட லாவா பாறையில் எவ்வளவு செறிவான 'ஹீலியம் 3' இருக்கிறது என கண்டறிவதன் மூலம், எவ்வளவு காலம் அது காஸ்மிக் கதிர்களால் தாக்கப்பட்டு வந்துள்ளது என்பதைக் குறிக்கும். அதாவது லாவா பொருள் எப்போது வெளியே வந்தது என அறிய முடியும். இதிலிருந்து எரிமலையின் வயதை கண்டறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !