அறிவியல் ஆயிரம்
ஒலி உருவாவது எப்படி
பல வித ஒலிகளை கேட்கிறோம். ஒவ்வொரு ஒலிக்கும் குறிப்பிட்ட சில பண்புகள் உள்ளன. நாம் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கு ஒலி முக்கியம். ஒரு பொருள் அதிர்வுக்கு உட்படுத்தப்படும்போது ஒலி உருவாகிறது. ஒலி என்பது ஒருவகை ஆற்றல். வெற்றிடத்தில் இதனால் பரவ இயலாது. இது பரவுவதற்கு காற்று, திரவம், திடப்பொருள் தேவை. ஒலியின் வேகம் திரவங்களை விட திடப்பொருள்களில் அதிகம். ஒலியின் வேகமானது வெப்பநிலை, அழுத்தம், ஈரப்பதம் உள்ளிட்ட பண்புகளை பொறுத்து மாறுபடும். வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒலியின் வேகமும் அதிகரிக்கிறது.