அறிவியல் ஆயிரம்
ஐரோப்பாவில் 'சிக்குன்குனியா'சிக்குன்குனியா வைரஸ் பாதிப்பு, வழக்கமாக மத்திய, தென் அமெரிக்கா, கரீபியன், இந்திய பெருங்கடல் தீவுகள், தெற்கு, தென் கிழக்கு ஆசிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது விரைவில் ஐரோப்பா, வட அமெரிக்க பகுதிகளுக்கும் பரவும் வாய்ப்புள்ளது என சீனாவின் ஜெசியாங் மருத்துவ பல்கலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காலநிலை, அப்பகுதிகளில் 'சிக்குன்குனியா' வைரசை பரப்பும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள் வாழ்வதற்கு ஏற்றதாக மாறியுள்ளதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.