உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : பழமையான தண்ணீர்

அறிவியல் ஆயிரம் : பழமையான தண்ணீர்

அறிவியல் ஆயிரம்பழமையான தண்ணீர்தற்போதும் கிடைக்கும் பூமியின் பழமையான தண்ணீர், கனடா சுரங்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகில் நடத்தப்பட்ட தண்ணீர் மாதிரிகளில் இதுதான் பழமையானது. இதன் ஆழம் சுமார் 3 கி.மீ. இந்த தண்ணீரை சோதனை செய்ததில் 260 கோடி ஆண்டு பழமையானது. இந்த தண்ணீர் மிக உப்பு, கசப்பு தன்மை வாய்ந்ததாக இருந்தது; கடல் நீரை விட அதிக உப்பாக இருக்கிறது என டொரண்டோ பல்கலை புவியியல் விஞ்ஞானி பர்பரா ஷெர்வுட் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. இதில் கிடைத்த ரசாயன மாதிரிகளை ஆய்வு செய்யும் பணியில் இக்குழு ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ