உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்கப்பல் மிதப்பது எப்படி'ஆர்க்கிமிடிஸ்' தத்துவப்படி கப்பல் வடிவமைக்கப் படுகிறது. இதன்படி கப்பல், கடல் நீரை அழுத்தி தண்ணீரை வெளியேற்றுகிறது. இவ்வாறு வெளியேறிய நீர், மீண்டும் அந்த இடத்தை நிரப்ப முயல்கிறது. இந்த 2 அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுகிறது. கப்பல் மிதக்க வெளியேற்றப்பட்ட நீரின் எடையும், கப்பலின் மொத்த எடையும் சமமாக இருக்க வேண்டும் . இதற்காக கப்பலின் வெளிப்புறம் ஒரு கோடு இருக்கும். கடல் நீர் மட்டம் அக்கோட்டுக்கு மேல் சென்றால் எடை அதிகரித்த கப்பல் கவிழும்.தகவல் சுரங்கம்நிலக்கரி, தீயணைப்பு வீரர்கள் தினம்இந்தியாவில் 1774ல் முதல் நிலக்கரி சுரங்கம் தொடங்கப்பட்டது. மின்சாரம், இரும்பு, சிமென்ட் உற்பத்தி உள்ளிட்ட பல பணிகளுக்கு நிலக்கரி அவசியம். நிலக்கரி சுரங்கங்களில் ஆபத்தான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை அங்கீகரிக்கும் விதமாக மே 4ல் நிலக்கரி சுரங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது.* தீ விபத்துகள், மீட்பு பணிகளில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 4ல் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி