உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்பூமிக்கு அருகே விண்கல்'99942 அபோபிஸ்' விண்கல் 2029 மே 13ல் பூமிக்கு அருகே (48,280 சதுர கி.மீ.,) கடந்து செல்ல உள்ளது. அப்போது நாசாவின் ஆசிரிஸ்-அபெக்ஸ் விண்கலம் இதை ஆய்வு செய்ய உள்ளது. இந்த விண்கல்லை 2004ல் ராய் டக்கர், டேவிட் டோலென், பெர்னார்டி ஆகிய மூன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இது எகிப்து கடவுள் சகோஸ் நினைவாக 'அழிவின் கடவுள்' என அழைக்கப்படுகிறது. இதன் அகலம் 1000 அடி. விட்டம் 1280 அடி. இது பூமியை தாக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. 2021ல், அடுத்த 100 ஆண்டுக்கு இதற்கு வாய்ப்பில்லை என கண்டறியப்பட்டது.தகவல் சுரங்கம்சர்வதேச குடும்ப தினம்ஒவ்வொருவரும் தன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் மே 15ல் சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் யாரும் தங்கள் குடும்பத்தை கைவிடக்கூடாது என இத்தினம் வலியுறுத்துகிறது. குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்பு, தொழில் வாய்ப்பு பற்றி குடும்பங்களின் பங்களிப்பையும் இத்தினம் உணர்த்துகிறது. 'பன்முகத்தன்மையை அரவணைத்தல், குடும்பங்களை வலுப்படுத்துதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 150 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ