| ADDED : ஜூன் 11, 2024 06:50 PM
அறிவியல் ஆயிரம்செவ்வாயில் பனிசெவ்வாய் கோளில் அதிகாலை உறை பனி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது 60 நீச்சல் குளத்துக்கு சமம். அதாவது இது 1.50 லட்சம் டன் அளவிலான நீருக்கு சமமான உறை பனி. இவை செவ்வாயின் தரைபகுதிக்கும், வளிமண்டலத்துக்கும் இடையே பயணிக்கிறது என கண்டறியப்பட்டது. இது செவ்வாய் கோளை ஆய்வு செய்த ஐரோப்பிய யூனியனின் 'எக்சோமார்ஸ்' விண்கலம் அனுப்பிய 30 ஆயிரம் படங்களை ஆய்வு செய்ததில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு தண்ணீருக்கான சாத்தியக்கூறு உறுதியாகிறது.தகவல் சுரங்கம்குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்கடந்த சில ஆண்டுகளாக போர், பொருளாதார சிக்கல், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் உலகில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை மீண்டும் உயர்கிறது. உலகில் 16 கோடி பேர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். இதில் முதலிடத்தில் ஆப்ரிக்கா, இரண்டாவது இடத்தில் ஆசியா உள்ளது. குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 12ல் உலக குழந்தைதொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நம் கடமைகளை நிறைவேற்றுவோம்; குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.