அறிவியல் ஆயிரம் : நிலவில் வீடு எப்படி
அறிவியல் ஆயிரம்நிலவில் வீடு எப்படிநிலவில் விஞ்ஞானிகள் தங்கி ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி மையம் நாசா திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கான குடியிருப்பை எப்படி அமைப்பது என்பதில் முடிவெடுக்காமல் உள்ளது. செங்கல், இரும்பு கட்டடம் அமைக்கலாம் என்றால், அதை நிலவுக்கு அனுப்புவதற்கான செலவு அதிகம். நிலவின் தட்பவெப்ப சூழலை அது தாங்குமா எனவும் தெரியாது. இந்நிலையில் தங்குமிடத்தை பூஞ்சை, பாசி, தண்ணீர் போன்றவற்றால் அமைக்கலாம். இதை நாம் கட்ட தேவையில்லை அதுவே வளர்ந்து கொண்டே போகும். நிலவு சூழலுக்கும் ஏற்றது என நாசா திட்டமிட்டுள்ளது.