அறிவியல் ஆயிரம் : மக்கள் இடம்பெயர்வது ஏன்
அறிவியல் ஆயிரம்மக்கள் இடம்பெயர்வது ஏன்பருவநிலை மாற்றம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உள்நாடுகளுக்குள் இடம் பெயர்கின்றனர். 1960 - 2016ல் 72 நாடுகளுக்குள் 1,07,000 இடப்பெயர்வுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் வறட்சி தீவிரமாகி வறண்டதாக மாறும்போது, இடப்பெயர்வு வேகமெடுக்கிறது என கண்டறிந்துள்ளனர். விவசாயத் துறைகளில் ஈடுபடுபவர்கள் தான் பருவநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நீர் வரத்து குறைவது, நிலம் காய்ந்து போவதால் அவர்களின் நேரடி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது.