அறிவியல் ஆயிரம் விண்கல்லை அழிக்க அணுகுண்டு
அறிவியல் ஆயிரம்விண்கல்லை அழிக்க அணுகுண்டு'2024 ஒய்.ஆர்.,' விண்கல், 2032 டிச.22ல் நிலவின் மீதுமோதுவதற்கான வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் ஏற்கனவே கணித்துள்ளனர். இவ்வாறு நடந்தால் அதில்இருந்து வெளிப்படும் துகள்களால் விண்வெளியில் சுற்றும் பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள், விண்கலத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மோதும் வாய்ப்பு அதிகமானால், அந்த விண்கல்லை, அணுகுண்டு மூலம் தகர்க்கும் திட்டம் நாசாவிடம் இருக்கலாம் என நிபுணர்கள்தெரிவிக்கின்றனர். இந்த விண்கல்லை 2024ல் நாசா கண்டறிந்தது. 2025 ஜூன் கணிப்பின் படி, இது நிலவின் மீது மோதும் வாய்ப்பு 4.3 சதவீதமாக இருக்கிறது.