உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : நிலவில் மோதிய விண்கலம்

அறிவியல் ஆயிரம் : நிலவில் மோதிய விண்கலம்

அறிவியல் ஆயிரம்நிலவில் மோதிய விண்கலம்அமெரிக்காவின் 'நாசா' அனுப்பிய 'அப்பல்லோ 11' விண்கலம் 1969 ஜூலை 20ல் நிலவை சென்றடைந்தது. இதில் நீல் ஆம்ஸ்ட்ராங், புஜ் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் சென்றனர். நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் காலடி வைத்தார். இதற்கு முன் நிலவின் தரைப்பரப்பு குறித்து அறிந்து கொள்ள, அதன் மீது வேண்டுமென்றே மோதி ஆய்வு செய்ய 1965 மார்ச் 24ல் 'ரேஞ்சர் 9' விண்கலத்தை 'நாசா' அனுப்பியது. அது மோதுவதற்கு 0.25 வினாடிக்கு முன்பு வரை, 5814 புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது. இது நிலவின் தரைபரப்பு குறித்து விஞ்ஞானிகள் அறிந்து கொள்ள உதவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி