அறிவியல் ஆயிரம்: பெரிய ஜெல்லி மீன்
அறிவியல் ஆயிரம்பெரிய 'ஜெல்லி' மீன்உலகின் பெரிய, நீளமான, எடைமிக்க 'ஜெல்லி' மீனை, பசிபிக் பெருங்கடல் பகுதியில் நீருக்கடியில் ஜான் ரோனி என்ற வீடியோகிராபர் படம் எடுத்துள்ளார். இதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதன் எடை 1000 கிலோவுக்கு மேல் இருக்கும் எனவும், இதன் நீளம் 100 அடிக்கு மேல் இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஜெல்லி மீன் பார்ப்பதற்கு ஆரஞ்சு, நீல நிறத்தில் காணப்படுகிறது. உலகில் இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய ஜெல்லி மீனின் அகலம் 7 அடி. நீளம் 120 அடி. பொதுவாக ஜெல்லி மீன்கள், கடல்மீன்களில் அழகானவை. ஆனால் ஆபத்தானவை.